Pages

Wednesday 21 July 2010

'முஸ்லிம்களுக்கான தனியான ஊடகம்: சாத்தியப்பாடுகளும் சவால்களும்'

இலங்கை முஸ்லிம் ஊடகம் குறித்த ஒரு நீண்ட ஆய்வுக்கான முற்குறிப்பு

அறிமுகம்

கடந்த பல வருடங்களாக முஸ்லிம்கள் தமக்கென்று ஒரு தேசிய ஊடகமில்லாத நிலைமை குறித்து அவ்வப்போது கரிசனை காட்டிவருவதுடன் மாத்திரம் நின்றுவிடும் நிலைமையை நம்மால் அவதானிக்க முடிகின்றது. நமது நாட்டிலுள்ள தேசிய ஊடகங்கள் முஸ்லிம்களைப் பற்றித் தவறாகஃதவறான கருத்துக்களை முன்வைக்கும் தருணத்தில் அல்லது 'நம் தரப்பு' செய்திகளைப் பிரசுரிக்க மறுக்கின்ற சந்தர்ப்பத்தில் இக்கதையாடல் நம்மிடையே சூடுபிடிக்கின்ற நிலைமையை நாம் அவதானிக்கலாம். நமது தற்போதைய ஊடகங்களின் பங்களிப்பை மிகத் துல்லியமாக வரையறுப்பதனை நமக்கான ஒரு தேசிய ஊடகத்தினை வரையறுப்பதற்கான முதலாவது மைல்கல்லாகக் கருதலாம்.

ஆய்வுக்கான பின்னணி

எந்த ஒரு சமூகத்தினதும் அல்லது நிறுவனத்தினதும் வளர்ச்சிக்கு அதன் கடந்தகால அடைவுகள் பற்றிய கணிப்பீடுகள் மிக முக்கியமானவையாகும். இது நமது ஊடகங்களுக்கும் பொருந்தும். ஊடகங்கள் முன்வைக்கின்ற செய்திகள் குறித்து எதிர்வினைகள் முன்வைக்கப்டும் ஒழுங்குஃமரபு நமது நாட்டிற்குப் புதியது. அதுவும் முஸ்லிம் ஊடகங்களைப் பொறுத்தரையில் அவை பற்றிய மறுவாசிப்பு இல்லையென்றே குறிப்பிட வேண்டும். இந்நிலையில், இலங்கையில் வெளிவரும் சமகால முஸ்லிம் ஊடகங்கள் பற்றிய ஆய்வு முயற்சிகளை முன்னெடுக்க எத்தனிப்பவர்கள் பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு முகம்கொடுக்க நேரிடலாம். இதனைக் கருத்திற்கொண்டும் இந்த ஆய்வுமுயற்சி உச்ச பயன்பாட்டைத் தரவேண்டும் என்ற நோக்கிலும், ஒரு வெளியாளாக அன்றி, இச்சமூகங்களின் உள்ளிருந்து மேற்கொள்ளும் சுய-விமர்சன ஒழுங்கில் இவ் ஆய்வை முன்வைக்க உள்ளேன்.

நோக்கம்

இவ்வாய்வு பின்வரும் இரு பிரதான நோக்கங்களைக் (Objectives) கொண்டதாக அமையும்.

முதலாவது, கடந்த இரண்டு வருங்களுக்குள் நமது ஊடகங்கள் அதன் வெளியீடுகள் மூலம் முன்வைத்துள்ள விடயங்கள் குறித்து ஒரு பகுப்பாய்வை (structural analysis) மேற்கொள்ளல்.

இதனை இன்னும் சிறிது விரிவாகக் குறிப்பிடுவதாயின், அவ்வாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, 'அதன் இலக்கு வாசகர்கள் (target readers) யார்? எவ்வாறான துறைகளில் அவ்வூடகங்கள் தமது பங்களிப்பை நல்கியுள்ளன? அவ்வூடகங்கள் தமது இலக்கு வாசகர்களை நோக்கி எதனை முன்வைக்கின்றது?' முதலான அம்சங்களைத் துல்லியமாக வரையறுப்பது இந்த ஆய்வின் மிகப்பிரதான நோக்கமாகும்.

இரண்டாவது, இவ்வூடகங்கள் தமது வெளியீடுகள் மூலம் நமது சமூகத்திலும் நமது நாட்டிலும் ஏற்படுத்தியுள்ள தாக்கம் (impact), பங்களிப்பு (contribution) என்பனவற்றை வரையறுத்தல். இது பலராலும் பலவிதமாகக் கருத்துரைக்க தக்கதான வாத-விவாதங்களை வேண்டிநிற்கின்ற சிக்கல்வாய்ந்த ஒரு பகுதியாகும். எனினும,; கருத்தியல் ரீதியான வாதமொன்றை முன்வைக்கும் நோக்கில் இவ்வாய்வை நான் எழுத முனையவில்லை. அத்துடன், இங்கு நான் முன்வைக்கும் கருத்துக்கள் முடிந்த முடிவுகளுமன்று. இவ்வாய்வில் இயன்றவரையில் கட்டுரையாசிரியர்களது தனிப்பட்ட கருத்துக்களை விமர்சிப்பதைத் தவிர்க்க விரும்புகின்றேன் மாறாக, ஒரு சமூகத்தில் தாக்குதிறன்மிக்க சமூக முன்னேற்றத்திற்கு காத்திரமான முறையில் பங்களிப்புச் செய்யும் விதத்திலமைந்த ஊடகப்பொறிமுறை (media mechanism) ஒன்றினை முன்வைத்தலையே இதன் பிரதான நோக்காகக் கொண்டுள்ளேன்.

ஆய்வு முறைமை

இந்த ஆய்வினை நமது நாட்டிலிருந்து 2008, 2009 ஆண்டுகளில் வெளியான இதழ்களை அல்-ஹஸனாத், எங்கள் தேசம் ஆகிய இரு மாதாந்த சஞ்சிகைகளுக்கு மட்டுப்படுத்தியுள்ளேன். இவ் ஆய்வு பின்வரும் நான்கு படிமுறைகளைக் கொண்டதாக அமையும்.

படிமுறை 01. ஏற்கெனவே வெளிவந்துள்ள ஊடகங்களின் பங்களிப்பு குறித்த கட்டுரைகள், சர்வதேச ஊடகங்களில் ஊடகம் பற்றி வெளியாகிய, ஒளி- ஒலிபரப்பு நிகழ்ச்சிகள், பிரசித்தி பெற்ற சர்வதேச ஊடகவியலாளர்களுடனான நேர்காணல்கள் என்பனவற்றை உள்வாங்கியதாக அமைதல் Literature Review).

படிமுறை 02. அல்-ஹஸனாத், எங்கள் தேசம் சஞ்சிகைகளில் 2008, 2009 ஆம் வருடங்களில் வெளிவந்துள்ள ஆக்கங்களைத் தலைப்பு வாரியாகத் தரம்பிரித்து அட்டவணைப்படுத்துதல்.

படிமுறை 03. இவ்விரு சஞ்சிகைகளினதும் coverage குறித்த ஒரு ஒப்பீட்டு நோக்கினை முன்வைத்தல்

படிமுறை 04. ஊடகமொன்று சமூக நலனிலும் அபிவிருத்தியிலும் எவ்வாறு காத்திரமான விதத்தில் நேரடியாகப் பங்களிப்புச் செய்யலாம் என்பது தொடர்பில் எனது ஆலோசனைகளை முன்மொழிதல்

ஆய்வுக் கட்டமைப்பு

இந்த ஆய்வுக் கட்டுரை மூன்று பகுதிகளாக அமையும்.

முதலாவது பகுதி உலக விவகாரங்களில் ஊடகத்தின் செல்வாக்கு எத்தகையது என்பது குறித்த ஒரு பொதுவாசிப்பாக அமையும்.

இரண்டாவது பகுதி அல் ஹஸனாத், உண்மை உதயம் ஆகிய இரு சஞ்சிகைகளிலும் வெளிவந்த ஆக்கங்கள் பற்றிய ஒப்பீட்டு நோக்கினை முன்வைக்கும்.

மூன்றாவது பகுதி ஊடகமொன்று எவ்வாறு ஒரு சமூகத்தின் அபிவிருத்திற்குப் பங்களிப்புச் செய்யலாம் என்பது குறித்த ஆலோசனைகளை முன்வைக்கும்.  By SL Muslim Forum

There are some important Questions;

01. What's the purpose of the study?

02. Who is going to head it?

03. Who is doing the actual field work?

04. How long will it take?

05. What outcome is expected?  
 
முன்வைத்துள்ள கேள்விகளுக்கு பதிலாக எனது கருத்தை இங்கு முன்வைத்தல் பொறுத்தமென நினைக்கின்றேன்.

01. What’s the purpose of the study?

இந்த ஆய்வு பின்வரும் நோக்கங்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும்

• குறித்த ஊடகத்தின் கடந்த கால வெளியீடுகள் மூலம் அவை இதுவரைகாலம் கதையாடலுக்கு உட்படுத்தியுள்ள விடயங்கள், அதன் மூலம் இவை சமூக தளத்தில் எத்தகைய தாக்கத்தை இவ் ஊடகங்கள் செலுத்தி வந்துள்ளன என்பதை ஆய்வுக்கு உட்படுத்தல்,

• இவ் ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்களின் சாதக பாதகங்கள், அவை முன்வைக்கின்ற கருத்துப் போக்கு, அவை யாரை இலக்கு வாசகர்களாகக் கொண்டு தமது கருத்துக்களை முன்வைக்கின்றன என்பது பற்றியும் பகுப்பாய்வு செய்தல், மற்றும்

• எதிர்காலத்தில் இவ் ஊடகங்களில் இருந்து நாம் எதனை எதிர்பார்க்கலாம், அதன் பலம், பலவீனம், மற்றும் இவ் ஊடகங்கள் எதிர்கொள்கின்ற சலால்கள் மற்றும் அதன் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் என்பன போன்ற ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்தல்

02. Who is going to head it? Who is doing the actual field work?

இத்தகைய ஒரு ஆய்வுக்கு யாரைத் தலைமை தாங்க வைப்பது என்பது குறித்து தீர்மாணிப்பதற்கு பின்வரும் விடயங்கள் கருத்திற்கொள்ளப்படல் வேண்டும்.

இந்த ஆய்வு பன்முகப்பட்ட முகாந்திரங்களைக் கொண்ட ஒன்றாகும். அதாவது நமது ஊடகங்களின் பங்களிப்பு என்று வரும் போது பலதரப்பட்ட தலைப்புக்களில் அதனை ஆய்வுக்கு உற்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

இதனை மிகச் சுறுக்கமாகக் குறிப்பிடுவதாயின் தேசிய விவகாரங்கள், இலங்கை முஸ்லிம் சமூக விவகாரங்கள், மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இவ்வூடகங்களின் உழஎநசயபந பற்றி ஆய்வுக்கு உட்படுத்தல் வேண்டும்.

அந்த வகையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆய்வுகளை இம்முயற்சிகளை பல கோணங்களில் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

03. What outcome is expected?

இங்கு நாம் ஆய்வு முயற்சியினை ஒரு திட்டமிட்ட முறைமையில் மேற்கொள்வதன் மூலம் முறையே குறுங்கால, இடைக்கால அடைவுகளாகப் பின்வரும் விடயங்களை வரையறுக்கலாம்.

01. நமது சமூகத்தில் பொதுவாக ஊடக ஊடகம் குறித்து ஆக்கபூர்வமான விமர்சனங்களை எவ்வாறு முன்வைக்கலாம் என்பதற்கான ஒரு மாதிரியாக இவ்வாய்வுகள் அமைதல் வேண்டும். அந்த வகையில் இது ஆய்வு முறைமைகளைப் பேணியதாகவும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட விமர்சனங்களாகவும் அமைதல் மிக அவசியமாகும்.

02. இதன் விளைவாக இடைக்காலத்தில் நமது ஊடகத்துறை தொடர்பான பலதரப்பட்ட விமர்சனங்களை முன்வைப்பதன் மூலம் சமூகத்தினதும் இந்த நாட்டினதும் முன்னேற்றப்பாதையில் பங்களிப்புச் செய்யும் முன்னோடி ஊடகங்களாக மாறுவதற்கான இலக்கு, நோக்கு குறித்து கதையாடலை சமூகத்தில் வளர்த்தல். By SL Muslim Forum
 
Home           Sri Lanka Think Tank-UK (Main Link)